தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நன்னடத்தை விதிகள் அமல்- ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்லக்கூடாது…!
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இனிமேல், புதிய அறிவிப்புகளை வெளியிடக் கூடாது என தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சென்னையில் செய்தி யாளர்களிடம் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், இனிமேல் புதிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிடக்கூடாது. முன் தேதியிட்டும் அறிவிப்பு வெளிவரக்கூடாது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், ரொக்கமாக ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே பணம் எடுத்து செல்லலாம். இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்க தடையில்லை. ஆனால், ஓட்டு சேகரிக்கக் கூடாது. தேர்தல் பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட உள்ளனர். மொத்தம் 20 கம்பெனி துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதாக ஓட்டுப்போடும் வகையில் சாய்வுதள படிக்கட்டு கட்டாயம் அமைக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடி ஓட்டுப்போட ஏதுவாக 12டி படிவம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.