தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதியை கேட்டுக் கொள்ளும் வகையில் ம.தி.மு.க.சார்பில் தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, இன்று ( 28.06.2023 ) திருச்சியில் கையெழுத்து இயக்கத்தை ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், மணிப்பூர் கலவரம் இதற்கெல்லாம் பதில் கூறாமல் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக பா.ஜ.க.வினர் பொது சிவில் சட்டம் குறித்து பேசுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். அப்போது துணை பொதுச்செயலாளர் ரொகையா சேக் முகமது, மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, டி.டி.சி.சேரன், மணவை தமிழ்மாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.