Rock Fort Times
Online News

திருச்சியில் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவி- காரணம் என்ன? போலீசார் விசாரணை…

திருச்சி ஸ்ரீரங்கம் சாத்தார வீதி பகுதியைச் சேர்ந்தவர் ரத்தின முருகேஷ். இவரது மகள் கீர்த்தனா (வயது 17). இவர் திருச்சியில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் இவர் அதிகமான மாத்திரைகளை ஒரே நேரத்தில் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் வயிற்று வலியால் துடித்த அவரை பெற்றோர் மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குபதிவு செய்து கல்லூரி மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்