Rock Fort Times
Online News

தஞ்சையில் முதல்வர் விஜயின் உருவ பொம்மை எரிப்பு; 4 பள்ளிகளுக்கு விடுமுறை…!

தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் குறித்தும், நடிகை திரிஷா குறித்தும் திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழக மகளிர் அணியினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தஞ்சாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து உதயநிதி ஸ்டாலினை இன்று( ஆகஸ்ட் 4) கைது செய்தனர். உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முக்கியச் சாலைகளில் திரண்டு அரசுக்கு எதிராகவும், காவல்துறையின் நடவடிக்கையைக் கண்டித்தும் கண்டனக் கோஷங்களை எழுப்பினர். அப்போது திடீரென, முதலமைச்சர் விஜய்யின் உருவ பொம்மைக்கு தீ வைத்தனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தீயை அணைக்க முயன்றதால், திமுக தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் காரசார விவாதம் நடந்தது. ஒரு வழியாக அந்த பொம்மையை போலீசார் கைப்பற்றி தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் போலீஸ் வாகனத்தில் தஞ்சைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் மீது தஞ்சை கிழக்கு காவல் நிலைய போலீசார் 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில் அந்த காவல் நிலையத்தை சுற்றியுள்ள
4 பள்ளிகளுக்கு மதியம் 1 மணியுடன் விடுமுறை அறிவிக்கப்பட்டு மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்