Rock Fort Times
Online News

கர்நாடகாவில் தமிழர்கள் படுகொலை: நேர்மையான, உயர்மட்ட விசாரணைக்கு முதல்வர் விஜய் உத்தரவு…அமைச்சர் நிர்மல் குமார்..!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மானியக் கோரிக்கை விவாதம் தொடர்பான 2-வது நாளான இன்று(18-08-2026) கர்நாடகாவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அப்போது அமைச்சர் நிர்மல் குமார் பேசுகையில், கர்நாடக வனப்பகுதியில் புலம்பெயர்ந்த தமிழர்கள் வசித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதி விசாரணைக்கு கர்நாடக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கர்நாடக வனத்துறையின் பதிலை ஏற்றுக்கொள்ள முடியாது. முதலில் சுட்டது யார் என விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நேர்மையான, உயர்மட்ட விசாரணைக்கு வலியுறுத்தியுள்ளார். தமிழர்களுக்கு எங்கு தீங்கு ஏற்பட்டாலும் முதல் குரல் கொடுப்பவர் முதல்வர் விஜய் தான் என்று தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்