தொகுதி மறு சீரமைப்பு விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடகமாடுகிறார்… * பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம்!
நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடகமாடுகிறார், இல்லாத ஒன்றுக்காக மாநில முதல்-அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டி இருக்கிறார் என்றும், இதனை கண்டிக்கும் வகையிலும் தமிழ்நாடு முழுவதும் இன்று (22-03-2025) பாரதிய ஜனதா கட்சி சார்பில் நிர்வாகிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து, கருப்பு கொடி ஏந்தி திமுக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகர பாஜக தலைவர் ஒண்டிமுத்து மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கருப்பு முருகானந்தம், விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு துரோகம் செய்கிறது. விவசாயிகள் பல கட்ட போராட்டங்கள் நடத்தினாலும் தமிழ்நாடு அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொகுதி மறு சீரமைப்பு குறித்த விவகாரத்தில் எந்த சூழ்நிலையிலும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் ஏற்கனவே தெளிவாக தெரிவித்துள்ளார். தொகுதிகள் குறைக்கப்பட்டால் தமிழ்நாடு பாஜக ஏற்றுக்கொள்ளாது என மாநில தலைவர் அண்ணாமலை தெளிவாக கூறியிருக்கிறார். ஆனால், தற்போது தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாடகம் நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் அனைவருமே திமுக அரசின் அடிமையாகவும், திமுக மாவட்ட செயலாளர்களின் ஏவல்துறையாகவும் செயல்பட்டு வருகின்றனர். வருகின்ற 2026ம் ஆண்டு ஜனநாயக ரீதியாக தேர்தல் நடைபெறும். அப்போது திமுக அரசு அகற்றப்படும் என கூறினார்.
Comments are closed.