இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்கு காலை 8.45 மணியளவில் வந்தடைந்தார். பின்னர், முப்படையினர் மற்றும் தமிழக காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றி உரையாற்றினார். அதனைத்தொடர்ந்து கல்பனா சாவ்லா, அப்துல்கலாம் பெயரிலான விருதுகள், சிறந்த காவலருக்கான விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கினார். விழாவில் தமிழக அமைச்சர்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.