சிறியவர் பெரியவர் என வயது வித்தியாசமின்றி, சாதி மத பாகுபாடின்றி அனைவரிடமும் அன்பாகவும், யதார்த்தத்துடனும் பழகும் இயல்பு கொண்டவர் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினரான அன்பில் பெரியசாமி. 1998, 2001 மற்றும் 2006 ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்தவர் இவர். கலைஞர் கருணாநிதியின் உற்ற நண்பரும், மறைந்த முன்னாள் அமைச்சருமான அன்பில் தர்மலிங்கத்தின் மகன்தான் அன்பில் பெரியசாமி. இவரது மகள் வழி பேரன் இன்பாவுக்கு இன்று ( 27-07-2023 ) பிறந்தநாள்.
இதனை முன்னிட்டு, திருச்சிக்கு வந்திருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இன்பா வாழ்த்து பெற்றார். முன்னதாக திமுகழக தலைமை நிலைய செயலாளரும், நகர்புற வளர்ச்சி துறை அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரிடமும் ஆசி பெற்றார். இந்நிகழ்வுகளின் போது இன்பாவின் பெற்றோர்களான இராமநாதன் – சன்மதி தம்பதியினர் உடனிருந்தனர். சிறுவன் இன்பா திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் 4-ம் வகுப்பு பயிலுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படிப்பிலும், விளையாட்டிலும் ஆர்வமுள்ள இன்பா எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று நீடூழி வாழ, ராக்போர்ட் டைம்ஸ் செய்தி குழு சார்பில் மனதார வாழ்த்துகிறோம் !
Comments are closed, but trackbacks and pingbacks are open.