தமிழகத்தின் டெல்டா பாசனப் பகுதிகளின் நீர் தேவையைத் தீர்க்கும் வகையில், காவிரி ஆற்றில் இருந்து வினாடிக்கு 9,000 கன அடி வீதம் தண்ணீரைத் திறந்து விடுமாறு காவிரி நீர் ஒழுங்காற்று குழு ம பரிந்துரைத்துள்ளது. காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 141-வது ஆலோசனைக் கூட்டம் காணொளி வாயிலாக இன்று(24-08-2026) நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில், தமிழகத்தின் கோரிக்கையைக் கணக்கில் கொண்டு, தமிழ்நாட்டுக்குக் காவிரியில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை வாரியத்திற்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, அடுத்த 15 நாட்களுக்குத் தொடர்ந்து வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீரைத் திறந்து விட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் நீர் இருப்பு மற்றும் தமிழகத்தின் விவசாயத் தேவைகளை ஆராய்ந்து எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, தமிழக விவசாயிகளிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.