Rock Fort Times
Online News

மணப்பாறை அருகே பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு பதிவு…

புதுக்கோட்டையில் இருந்து திண்டுக்கல்லுக்கு சென்ற அரசு பேருந்தை  ராஜாளிபட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் ஓட்டினார். திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனை அருகில் அந்த பேருந்து வந்தபோது அண்ணாவி நகரைச் சேர்ந்த அப்பாஸ் ( வயது 35) என்பவர் சாலையில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திக் கொண்டு போக்குவரத்திற்கு இடையூறு செய்துள்ளார். அப்போது பேருந்து டிரைவர், ஹாரன் அடித்தபோதும் அப்பாஸ் நகராமல் இருந்ததால் டிரைவர் மீண்டும் ஹாரன் அடித்துள்ளார். இதனால் கோபமடைந்த அப்பாஸ், டிரைவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த டிரைவர், பேருந்தை நடு ரோட்டிலேயே நிறுத்திவிட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இது குறித்து பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில், பணியை செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் போன்ற பிரிவுகளின் கீழ் அப்பாஸ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்