விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு பிரச்சனை மற்றும் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நேற்று ( 21.06.2023 ) அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்தநிலையில், போலீசார் அனுமதி இன்றி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், சட்டவிரோதமாக கூடுதல் போக்குவரத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி, முன்னாள் அமைச்சர்கள் மோகன், சிவபதி, வளர்மதி, மாநில எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட 700 பேர் மீது கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.