திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 43). இவர், திருச்சி செம்பட்டு பகுதியில் வசித்து வரும் காங்கிரஸ் பிரமுகரும், முன்னாள் கவுன்சிலருமான காளீஸ்வரன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கடந்த 2019 ம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் அடமானமாக வைத்து ரூ.85 லட்சம் கடன் பெற்று காளீஸ்வரனிடம் கொடுத்தார். 3 மாதத்தில் பணத்தை திருப்பி தருவதாக கூறிய காளீஸ்வரன் நீண்ட நாட்கள் ஆகியும் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால், வங்கி நிர்வாகத்தினர் சுரேஷ் வீட்டை ஜப்தி செய்ய வந்துள்ளனர். இதனால் காளீஸ்வரனுக்கும், சுரேஷுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போது காளீஸ்வரன் தாக்கியதில் சுரேஷ் காயம் ,அடைந்தார். இதுகுறித்து கே.கே.நகர் போலீசில் சுரேஷ் புகார் அளித்தார். அதன் பேரில் முன்னாள் கவுன்சிலரும், காங்கிரஸ் பிரமுகருமான காளீஸ்வரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.