Rock Fort Times
Online News

திருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து! தம்பதிகள் பலி மகள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

திருவள்ளுர் மாவட்டம், பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன் (வயது41). இவரது மனைவி ராஜஸ்ரீ (வயது 40). இவர்களது மகள் ருதிஷ் (வயது13) இவர்கள் மூவரும் பழனியில் சுவாமி தரிசனம் செய்ததற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். காரை சசிதரன் ஒட்டி வந்தார். திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அஞ்சாலிகளம் அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு கட்டையில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 3 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். இதில் சசிதரன் , ராஜஸ்ரீ இருவரும் இறந்துவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த ருதீஸ் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து மணப்பாறை தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்