திருச்சியில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி இல்ல திருமண விழாவிற்கு கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வருகை தந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்., இந்திய பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் மீண்டும் மத்தியில் மோடி ஆட்சி அமையும் என கூறப்படுகிறது. மூன்றாவது முறையாக மோடி தான் மத்தியில் ஆட்சிக்கு வருவார் என்பது அன்றே எனக்கு தெரியும்.தமிழ்நாட்டின் நிலைமை என்ன என்று பலரும் கேட்கிறார்கள் நான்காம் தேதி தேர்தல் முடிவு வெளியான பின்பு, உண்மை நிலவரம் என்ன என்பது உங்களுக்கு தெரிந்து விடும்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை பொருத்தவரை அம்மாவின் தொண்டர்கள் அனைவரையும் ஒரே கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதுதான் நோக்கம் எனக் கூறினார்.
Comments are closed.