Rock Fort Times
Online News

திருச்சி தில்லைநகரில் உள்ள தனியார் மருத்துவமனை கழிவறைக்குள் பிணமாக கிடந்த கார் டிரைவர்…!

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் குமாரமங்கலம் கிராமம் சக்தி நகரை சேர்ந்தவர் குமரவேல் (வயது 55). கார் டிரைவர். இவர் திருச்சி தில்லைநகர் 11-வது கிராஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நோயாளி ஒருவரை அழைத்து வந்தார். நோயாளி டாக்டரை பார்க்க மருத்துவமனைக்குள் சென்று விட்டார். டிரைவர் குமரவேல் தனது காரை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திவிட்டு, கழிவறைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வரவில்லை. நோயாளி டாக்டரை பார்த்து விட்டு, டிரைவரை தேடினார். ஆனால், அவரை காணவில்லை. அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போதும் எடுக்கவில்லை. ஆனால், கழிவறைக்குள் இருந்து செல்போன் அடிக்கும் சத்தம் கேட்டது. மருத்துவமனை ஊழியர்கள் கதவை தட்டியும் திறக்கப்படவில்லை.இதனால், கழிவறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் கழிவறைக்குள் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. இது குறித்த தகவலின் பேரில் தில்லைநகர் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து குமரவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்