Rock Fort Times
Online News

கள்ளக்காதல் விவகாரத்தில் கட்டிட மேஸ்திரி மனைவி படுகொலை…

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பேரேரிப்புதூரை அடுத்த தேக்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராம் (வயது 44). கட்டிட மேஸ்திரி. இவருக்கு ஜெயமணி (38) செல்வி என 2 மனைவிகள். ஜெயமணிக்கும், பாறைவளவு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மனோகரன் (46) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ராஜாராம், ஜெயமணியை கண்டித்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜெயமணி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை தேடி பார்த்தபோது வனச்சாலை பெரிய மேடு பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த அரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
முதல்கட்ட விசாரணையில் ஜெயமணி வேறு சிலருடன் பேசியதாகவும், அதனால் மனோகரனுக்கு ஜெயமணி மீது சந்தேகம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
சம்பவத்தன்று இரவு ஜெயமணியை சந்தித்து பேசிய மனோகரன் இதுதொடர்பாக ஜெயமணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த மனோகரன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெயமணியை 14 முறை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் ஜெயமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோகரனை கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்