சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விமான நிலைய இயக்குனர் அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால், அதிகாரிகள் உஷாரானார்கள். மோப்ப நாய் உதவியுடன் விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் அங்குலம், அங்குலமாக அதிரடி சோதனை நடத்தினர். பயணிகளின் உடைமைகள் தீவிரமாக சோதனை இடப்பட்டன. ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இருந்தாலும் விமான நிலையத்தில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்துக்கு கடந்த இரண்டு வாரங்களில் தொடர்ந்து 5-வது முறையாக, வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.