விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடி விபத்து: உடல் சிதறி 3 தொழிலாளர்கள் பலி…! – (பதை பதைக்க வைக்கும் வீடியோ)
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் – கீழஉப்பிலிக்குண்டு சாலையில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இங்கு பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் வெடி மருந்துகளை, குவாரி அருகே உள்ள அறையில் இறக்கியபோது எதிர்பாராத விதமாக வெடிமருந்துகள் வெடித்து சிதறின.
இந்த விபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். 2 வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தன. இந்த வெடி விபத்தால் அப்பகுதியை சுற்றி 20 கிலோ மீட்டர் தூரம் வரை அதிர்வுகள் ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கல்குவாரியில் தொழிலாளர்கள் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் கல் குவாரியை மூட வலியுறுத்தி கடம்பன்குளம் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதபதப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.