திருச்சி உறையூர் கடைவீதி பகுதியில் மாநகராட்சி கோ அபிஷேகபுரம் கோட்டம் சாா்பில் இன்று செயற்பொறியாளா் ரவிகுமாா் தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனா். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வின் மாநகா் மாவட்ட தலைவா் ராஜசேகரன் , செயலாளா் நாகேந்திரன் தலைமையில் பாஜக செயற்குழு உறுப்பினா் கருணாநிதி, பட்டாசு கண்ணன், டிடி. தினகா், ஏ.ஆா். பாட்ஷா, ரவிச்சந்திரன், உறையூா் மண்டல தலைவா் ராஜேஷ், வா்த்தக அணி தலைவா் சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இது குறித்து தகவல் அறிந்த காவல் உதவி ஆணையா் கென்னடி , இன்ஸ்பெக்டர் ராஜா, மாநகராட்சி உதவி ஆணையா் சதீஷ்குமாா் ஆகியோா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பா.ஜ.க.வினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது ஒருதலை பட்சமாக ஆளும் கட்சி கவுன்சிலா் பேச்சை கேட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றும் மாநகராட்சி ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோாி கோாிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதன்பேரில் சாலை மறியல் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
Next Post

Comments are closed, but trackbacks and pingbacks are open.