அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் : ராமாயண புராணத்துடன் தொடர்புடைய கோவில்களில் வழிபாடு செய்யும் பிரதமர் மோடி…!
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-01-2024 தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் இருந்து வருகிறார்.
அதன்படி, அவர் தினமும் உணவாக இளநீர் மட்டும் குடித்து தரையில் படுத்து தூங்குகிறார். தினமும் கோ-பூஜை செய்து அன்னதானமும் வழங்குகிறார்.
மேலும், ராமாயண புராணத்துடன் தொடர்புடைய கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார் .அதன்படி மராட்டிய மாநிலம் நாசிக், ஆந்திர மாநிலம் லெபக்சி, கேரள மாநிலம் குருவாயூர் ஆகிய இடங்களில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்தார். அதனைத்தொடர்ந்து தமிழகத்தில்
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் இன்று(20-01-2024) சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கும் சென்றார். அங்கு இரண்டு நாட்கள் தங்கும் பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்களில் நீராடி,அயோத்தி கோவிலுக்கு அங்கிருந்து புனித நீரை எடுத்துச் செல்கிறார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.