Rock Fort Times
Online News

மாநகராட்சிகளில் முதலிடம் பிடித்த திருச்சி மாநகராட்சிக்கு விருது…!

முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்..

13 கருப்பொருளை மையமாக கொண்டு தமிழகத்தில் சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன. இதில் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் சிறந்த மாநகராட்சியாக திருச்சி மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு முதல் இடத்தை பிடித்தது. சாலைகள் அமைத்தல், தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்குவது, பாதாள சாக்கடை அமைத்தல் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருவது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகளை சிறப்பாக கையாண்டமைக்காக இந்த விருதுக்கு திருச்சி மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்கான விருதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று ( 15.08.2023 ) நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோரிடம் வழங்கி வாழ்த்தினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்