Rock Fort Times
Online News

ஏர் ஹாரன் பொருத்தி அட்ராசிட்டி! திருச்சியில் 14 பஸ்களுக்கு அபராதம்!

ஆர்.டி.ஓ ரைடால் சத்திரம் பஸ் ஸ்டாண்டில் உதறல்! விதி மீறிய 14 பஸ்களுக்கு அபராதம்!

சமீப காலத்தில் திருச்சி மாநகரத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்படுவதாகவும், அதிக சத்தம் எழுப்பும் இந்த ஹாரன்கள் வாகன ஓட்டிகளை பீதிக்கு உள்ளாக்குவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து திருச்சி ஸ்ரீரங்கம், கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட சத்திரம் பேருந்து நிலையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் குமார் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள்
செந்தில்குமார், பிரபாகரன், அருண்குமார் ,முகமது மீரான், செந்தில் ஆகியோர் த திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

30க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த ஹாரன்கள் ஒலி அளவை கண்டறியும் கருவியின் உதவியுடன் சோதனை செய்யப்பட்டது. அப்போது 30 பேருந்துகளில் 14 பேருந்துகள் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்களுக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பொதுவாக காதை கிழிக்கும் வகையில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பொருத்தக் கூடாது என பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. 90 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பினால் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற வாகன சோதனையில் அதிக ஒலி எழுப்பிய 14 வாகனங்களுக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அதிக ஒலி எழுப்பும் வாகன ஒட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்