Rock Fort Times
Online News

மீண்டும் தொடர் விடுமுறை- அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு…

வருகிற 26ம் தேதி வெள்ளிக்கிழமை குடியரசு தினம், 27ம் தேதி( சனிக்கிழமை) 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் தைப்பூசம் தொடர் விடுமுறையை ஒட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு தினம் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு வியாழக்கிழமை முதல் ஞாயிறு வரை தொடர் விடுமுறை நாட்கள் வருவதால், 24ம் தேதி மற்றும் 25ம் தேதி சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் பிற இடங்களிலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 24.01.2024 மற்றும் 25.01.2024 அன்று தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து 405 A அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 175 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 580 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
மேலும், 25ம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சென்னையிலிருந்து 10 குளிர்சாதன பேருந்துகள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக காலை 10 மணி முதல் இயக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்