திமுக இளைஞரணி மாநாட்டில் அசைவ உணவு தயாரித்து வழங்கிய திருச்சி கே.எம்.எஸ்.ஹக்கீம் பிரியாணி குழுமத்தின் நிறுவனருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு….
திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21-01-2024 ( ஞாயிற்றுக்கிழமை) சேலத்தில் மிக பிரமாண்டமாக நடந்தது. மாநாட்டில் திமுக தலைவரும்,
முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர், அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி .ஆர்.பாலு எம்பி, திமுக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, கனிமொழி கருணாநிதி எம்பி, இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் , தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு அசைவ உணவு சமைத்து வழங்கும் பொறுப்பு திருச்சியில் மிகவும் பிரபலமான கே.எம்.எஸ்.ஹக்கீம் பிரியாணி குழுமத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து மாநாட்டில் கலந்து கொண்ட கட்சி உயர் மட்ட நிர்வாகிகள், கழக முன்னோடிகள் மற்றும் இளைஞர் அணியை சேர்ந்தவர்கள், தொண்டர்கள் என கிட்டத்தட்ட 3.50 லட்சம் பேருக்கு ஹக்கீம் பிரியாணி குழுமத்தினர் சுடச்சுட மட்டன் பிரியாணி, சிக்கன்-65, பிரட் அல்வா, ஆனியன், ரைத்தா, கத்தரிக்காய் கட்டா உள்ளிட்டவற்றை மிகவும் சுவையாகவும், சரியான தரத்திலும், சமைத்து உரிய நேரத்தில் வழங்கினர்.
இதனை பாராட்டும் வகையில் திருச்சி கே.எம்.எஸ். ஹக்கீம் பிரியாணி குழுமத்தின் நிறுவனர் கே.எம்.எஸ். ஹக்கீமை, திமுக இளைஞர் அணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெகுவாக பாராட்டி மகிழ்ந்தார். அப்போது எம்.சையது இப்ராஹிம், கே.எம் எஸ்.மொய்தீன், டாக்டர் முகமது ஹக்கீம், முகமது பைசல், ஷேக் அலாவுதீன், ஷேக் இப்ராஹிம், உமர் பாரூக் ஆகியோர் உடன் இருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.