திருச்சி மாநகர பகுதியில் ஜனவரி 30ம் தேதி (வியாழக்கிழமை) மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, திருச்சி நகரிய மின்வாரிய செயற்பொறியாளர் கா. முத்துராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்சி நீதிமன்ற வளாக துணை மின்நிலையத்தில் ஜனவரி 30ம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை புதுரெட்டித் தெரு, பொன்விழா நகர், கிருஷ்ணன் கோயில் தெரு, பங்காளி தெரு, மத்திய பேருந்து நிலையம், கண்டித்தெரு, பாரதிதாசன் சாலை, ராயல் சாலை, அலெக்ஸ் சாண்ட்ரியா சாலை, எஸ்பிஐ காலனி, பென்வெல்ஸ் சாலை, வார்னர்ஸ் சாலை, அண்ணாநகர், குத்பிஷா நகர், உழவர் சந்தை, ஜெனரல் பஜார், கீழசத்திரம் சாலை, பட்டாபிராமன் சாலை, கேஎம்சி மருத்துவமனை பகுதி, புத்தூர், அருணா தியேட்டர், கணபதிபுரம், தாலுகா அலுவலக சாலை, வில்லியம்ஸ் சாலை, சோனா-மீனா திரையரங்கு பகுதி, நீதிமன்றப் பகுதி, அரசுப் பொது மருத்துவமனை, பீமநகர், செடல் மாரியம்மன் கோயில் பகுதி, கூனி பஜார், ரெனால்ட்ஸ் சாலை, லாசன்ஸ் சாலை, வண்ணாரப்பேட்டை, பாரதிதாசன் சாலை, ஈவெரா சாலை, வயலூர் சாலை, பாரதிநகர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது . மேலும், புகார்களுக்கு 94987-94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.