அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு,திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என் நேரு தலைமையில், திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சியில் பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் கே.என் அருண்நேரு மத்திய மாவட்ட திமுக செயலாளர் கே.வைரமணி, எம்.எல்.ஏக்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், முன்னாள் எம்.எல்.ஏ அன்பில் பெரியசாமி,ராமர், மாநகர மேயர் மு.அன்பழகன், அந்தநல்லூர் சேர்மன் துரைராஜ், அவைத் தலைவர் அம்பிகாபதி, மற்றும் கழக நிர்வாகிகள் டோல்கேட் சுப்பிரமணி, செவந்திலிங்கம், கவுன்சிலர்கள் முத்துச்செல்வம், மோகன்தாஸ், கமல் முஸ்தபா, ராமதாஸ், நிர்வாகிகள் பரணி கார்த்திக்,சந்திரன் பாலசுப்ரமணியன், மூவேந்தரன், கருப்பையா புஷ்பராஜ், முகுந்தன் வழக்கறிஞர் அந்தோணி, சுரேஷ் மற்றும் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.