திருச்சி மாநகர் மாவட்ட அமமுக செயலாளர் செந்தில்நாதன் ராஜினாமா…!* டிடிவி தினகரன் மீது ‘பகீர்’ குற்றச்சாட்டு..!
அமமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தவர் செந்தில்நாதன். அவர் இன்று( மே 12) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் . இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்தும், அதிமுகவை மீட்க வேண்டும் என்ற நோக்கில் கட்சி ஆரம்பித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீண்டும் எடப்பாடி பழனி சாமியை ஆதரித்ததுடன், துரோகத்தின் வழி நடக்கிறார். ஆகவே ,அமமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அதில் அவர் தெரிவித்துள்ளார். இவர், அ.ம.மு.க. மாநகராட்சி கவுன்சிலராக பதவி வகித்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்ததால் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.