தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகிற 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தமிழக போக்குவரத்துத் துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் ஜூன் மாதம் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு 7-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்றைய தினம் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்படும். நடப்பு கல்வி ஆண்டிற்கான பஸ் பாஸ் பள்ளிகள் திறந்த பிறகே வழங்கப்படும் என்றாலும், மாணவர்கள் பள்ளி சீருடை அணிந்திருந்தால் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்க கண்டக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி சீருடை அணிந்த மற்றும் அடையாள அட்டை வைத்திருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்டால் , கண்டக்டர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.