Rock Fort Times
Online News

ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பதை கண்டித்து திருச்சியில் அதிமுகவினர் மாபெரும் ஆர்ப்பாட்டம்…!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி, திருவறும்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பல ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு திட்டமிட்டு ஏழை, எளிய மக்களை வேதனைக்கு ஆளாக்கத் துடிக்கும் திமுக அரசை கண்டித்தும், இத்திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தியும், திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு ,திருச்சி மாநகர் ஆகிய மாவட்டங்கள் சார்பில் திருச்சி அல்லித்துறை அண்ணா திடலில் அதிமுக சார்பில் இன்று(22-07-2024) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி எம்.எல்.ஏ, அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ.  ஆகியோர் தலைமை தாங்கினார்கள். திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி , திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி. யுமான ப.குமார், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.  ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர்கள் ரத்தினவேல், வளர்மதி, மனோகரன், முன்னாள் அமைச்சர்கள் என்.ஆர்.சிவபதி, அண்ணாவி, பூனாட்சி, நல்லுசாமி, முன்னாள் எம்எல்ஏக்கள் சின்னசாமி, பாலன், பரமேஸ்வரி முருகன், சந்திரசேகர், மல்லிகா சின்னசாமி, இந்திராகாந்தி, எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் பொன்.செல்வராஜ்,ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் அரவிந்தன், ஜோதிவாணன்,  முன்னாள் மாவட்ட செயலாளர்கள் கே.சி.பரமசிவம், சுப்பு (எ)சுப்பிரமணியன் மற்றும் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம்

ஆர்ப்பாட்டத்தில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான்,  அறிவழகன் விஜய், அய்யம்பாளையம் ரமேஷ்குமார், ஜெயம்ஸ்ரீதர், இளைஞர் அணி தேவா, பேரூர் கண்ணதாசன், மாணவரணி அறிவழகன், ஸ்ரீகாந்த், எஸ்.பி.முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், சுந்தர்ராஜன், ஆதாளி, டைமன் திருப்பதி, ஒன்றிய கவுன்சிலர் புங்கனூர் கார்த்திக், ரவிசங்கர், அழகாபுரி செல்வராஜ், வீரமணி, துறையூர் பிரகாஷ், வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், சம்பத்குமார்,  சாத்தனூர் வாசு, இ.பி.ஏகாம்பரம், செந்தில், கடிகை ராஜகோபால், செந்தில்குமார்,கதிர்வேல், சோனா விவேக்,
வீரமுத்து, மண்ணச்சநல்லூர் ராஜேந்திரன், சமயபுரம் ராமு, செல்வி வெங்கடேசன், எம்பி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் நிர்வாகிகள் நெட்ஸ் இளங்கோ, சண்முகபிரபாகரன், அருண் நேரு, எஸ்.பி பாண்டியன், ராவணன், முத்துக்குமார், கார்த்திக், சூப்பர் நடேசன், டி.என்.சிவகுமார், பாலசுப்பிரமணியன்,தண்டபாணி, பாஸ்கர், தெய்வ மணிகண்டன், கவுன்சிலர் அனுசுயா, ரவிசங்கர், கும்பக்குடி முருகேசன், பவுன் ராமமூர்த்தி, வக்கீல்கள் அழகர்சாமி, முருகன், மணப்பாறை சிவசுப்பிரமணியன்,சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாநகர் மாவட்டம்

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நிர்வாகிகள் ஜெ.பேரவை என்ஜினியர் கார்த்திகேயன், அய்யப்பன், ஜாக்குலின், வனிதா, பத்மநாதன், முத்துக்குமார், என்ஜினியர் இப்ராம்ஷா, கலிலுல் ரகுமான், பாலாஜி, ஞானசேகர், வெங்கட் பிரபு, ராஜேந்திரன், சகாபுதீன், வக்கீல் ராஜேந்திரன், அப்பாஸ், இலியாஸ், பகுதி செயலாளர்கள் அன்பழகன், என்.எஸ்.பூபதி, சுரேஷ் குப்தா, வெல்ல மண்டி சண்முகம், ஏர்போர்ட் விஜி, ரோஜர், எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, நாகநாதர் பாண்டி, புத்தூர் ராஜேந்திரன், கலைவாணன், நிர்வாகிகள் வெல்லமண்டி பெருமாள், இன்ஜினியர் ராஜா என்கிற சிவசங்கர ராஜவேலு, ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி,வக்கீல்கள் முல்லை சுரேஷ், முத்துமாரி, வரகனேரி சசிகுமார், ஜெயராமன், சுரேஷ்,எம்ஜிஆர் மன்றம் அப்பாகுட்டி, வாழைக்காய் மண்டி சுரேஷ், பாலக்கரை ரவீந்திரன், சக்திவேல், குருமூர்த்தி, அக்பர் அலி, கீழக்கரை முஸ்தபா, மார்க்கெட் பிரகாஷ், உறந்தை மணிமொழியன், இன்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், கே.டி.அன்புரோஸ், கே.டி.ஏ.ஆனந்தராஜ், எடத்தெரு பாபு, உடையான்பட்டி செல்வம், டைமன் தாமோதரன், ஜ.டி.நாகராஜ், எனர்ஜி அப்துல் ரகுமான், டி ஆர். சுரேஷ்குமார், தென்னூர் ஷாஜகான், நத்தர்ஷா, எடத்தெரு எம்.கே.குமார், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

work from home job போல அரசியல் ! நடிகர் விஜய்யை விமர்சனம் செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

1 of 940

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்