Rock Fort Times
Online News

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி திருச்சியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்…

விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்தும், அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய கோரியும் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் இன்று ( 21.06.2023 ) ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி மாநகர், வடக்கு, தெற்கு, மாவட்ட அ.தி.மு.க.சார்பில் மேல சிந்தாமணி அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார், வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி, அமைப்பு செயலாளர் ரத்தினவேல், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில செயலாளர் சிவபதி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணை செயலாளர்கள் சீனிவாசன், பொன் செல்வராஜ், முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் அரசு கொறடா மனோகரன், அவைத் தலைவர் ஐயப்பன், மாணவரணி செயலாளர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் கே.சி.பரமசிவம், ஜாக்குலின், வனிதா, பத்மநாதன், சிந்தாமணி முத்துகுமார், ஏ.டி.பி.ராஜேந்திரன், இலியாஸ், வெல்லமண்டி பெருமாள், அன்பழகன், சுரேஷ்குப்தா, ஏர்போர்ட் விஜி, வெல்லமண்டி சண்முகம், பூபதி, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, நாகநாதர் பாண்டி, கலைவாணன், தென்னூர் அப்பாஸ், சகாபுதீன், கவுன்சிலர்கள் அம்பிகாபதி, அரவிந்தன், முன்னாள் துணை மேயர் மரியம் ஆசிக், கலீலுல் ரகுமான், என்ஜினீயர் இப்ராம்ஷா, வக்கீல்கள் சுரேஷ், தாமரை செல்வம், ஜெயராமன், கங்கை செல்வன் மற்றும் அப்பாக்குட்டி,ஜெயக்குமார், உடையான்பட்டி செல்வம், காசிபாளையம் சுரேஷ்குமார், ஆரி, சிந்தை ராமச்சந்திரன், ஈஸ்வரன், கல்லுக்குழி முருகன், டைமன் தாமோதரன், பிளாட்டோ, சதீஷ்குமார், ஞானசேகர், ஐ.டி பிரிவு நாகராஜ், என்ஜினியர் ரமேஷ், பாலாஜி, எடத்தெரு பாபு, ஒத்தக்கடை மகேந்திரன், மணிகண்டன், வசந்தம் செல்வமணி, எ.புதூர் வசந்தகுமார், சிங்கமுத்து, வண்ணார்பேட்டை ராஜன், நத்தர்ஷா, ரோஜர், பொம்மாச்சி பாலமுத்து,வெல்ல மண்டி கன்னியப்பன், கிதிர்முகமது, என்ஜீனியர் ராஜா, குருமூர்த்தி, நாட்ஸ் சொக்கலிங்கம், முகமது யுசுப்,எனர்ஜி அப்துல் ரகுமான், எம்.கே.குமார், சாத்தனூர் வாசு, பழனியப்பன், கிருஷ்ணன்,
பொன்ராஜ், அரப்ஷாகேபி ராமநாதன், சதீஷ்குமார்,கே.டி. அன்பு ரோஸ், கே.டி.ஏ. ஆனந்த்ராஜ், ஜெகதீசன், கதிர்வேல், தர்கா காஜா, கே.சி.பி.ஆனந்தன், ராஜ்மோகன்,எடத்தெரு பார்த்திபன், எட்வர்டு, பொன்.அகிலாண்டம், ராமமூர்த்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி மாவட்ட செயலாளர் பேரூர் கண்ணதாசன், மாணவர் அணி மாவட்ட செயலாளர் அறிவழகன்,ஒன்றிய செயலாளர்கள் முத்து கருப்பன், ஜெயக்குமார், நடராஜ், பகுதி செயலாளர்கள் சுந்தர்ராஜன், டைமன் திருப்பதி, நிர்வாகிகள் பிரியா சிவகுமார் ,வி.என்.ஆர்.செல்வம், அழகாபுரி செல்வராஜ், துறையூர் பிரகாஷ், இ.பி ஏகாம்பரம், சமயபுரம் ராமு, எம்பி.பிரகாஷ், மண்ணச்சநல்லூர் ரமேஷ் படையப்பா ரெங்கராஜ், நெடுந்தெரு செந்தில் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரசேகர், நிர்வாகிகள் அருணகிரி, நெட்ஸ் இளங்கோ, அருண் நேரு, அசோகன் சிவக்குமார், சூப்பர் நடேசன், வக்கீல் அழகர்சாமி, சண்முக பிரபாகரன், இஸ்மாயில், எஸ்.பி பாண்டியன், ராவணன், கார்த்திக், மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்