Rock Fort Times
Online News

தனது “எக்ஸ்” பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக நடிகை குஷ்பு புகார்…!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், கார்த்திக், சத்யராஜ், பிரபு உட்பட பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தவர். பின்னர், அரசியலில் கால் பதித்த அவர் தற்போது பாஜகவில் உள்ளார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் அவ்வப்போது பாஜகவின் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் தனது ‘எக்ஸ்’ பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனது ‘எக்ஸ்’ கணக்கில் ஹேக்கர்கள் மின்னஞ்சல் முகவரியை மாற்றி உள்ளதாகவும், இது தொடர்பாக புகார் அளித்துள்ளதாகவும், விரைவில் தனது கணக்கு மீட்டெடுக்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஏற்கனவே பல நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகளின் ‘எக்ஸ்’ பக்கங்களை ஹேக்கர்கள் கைப்பற்றி, பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, திரிஷாவின் எக்ஸ் பக்கம் சமீபத்தில் ஹேக் செய்யப்பட்டு அதில் அவருக்கே தெரியாமல் கிரிப்டோ கரன்சி உள்பட பல பதிவுகள் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல தற்போது குஷ்புவின் ‘எக்ஸ்’ பக்கமும் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்