Rock Fort Times
Online News

காதலரை கரம் பிடிக்கும் நடிகை கீர்த்திசுரேஷ்- வருகிற 12-ம் தேதி கோவாவில் திருமணம்- வைரலாகும் பத்திரிகை…!

தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை காதலிப்பதாகவும், இந்த காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக சில நாட்களுக்கு முன் கீர்த்திசுரேஷ், தன் காதலருடன் இணைந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “15 ஆண்டுகளை கடந்துவிட்டோம். எப்போதும் தொடரும்” என தெரிவித்ததுடன் காதலர் ஆண்டனிதான் என்பதையும் குறிப்பிட்டார். இந்தநிலையில், கீர்த்தி சுரேஷ் – ஆண்டனியின் திருமணம் டிசம்பர் 12 ம் தேதி கோவாவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான திருமண அழைப்பிதழை பிஆர்ஓ-க்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த திருமண பத்திரிகை தற்போது வைரலாகி வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்