Rock Fort Times
Online News

நடிகை காயத்ரி ரகுராம் அ.தி.மு.க.வில் ஐக்கியம்…

தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனச் சொல்லி சர்ச்சையை கிளப்பியவர் நடிகை காயத்ரி ரகுராம். தனிப்பட்ட முறையிலும் அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து வந்தார். இந்தசூழலில் அவர் கடந்த வருடம் இதே ஜனவரி மாதம் பாஜகவில் இருந்து 6 மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால், அதற்கடுத்த சில மாதங்களிலேயே காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து தன்னுடைய சமூகவலைதளப் பக்கங்களில் பாஜகவுக்கு எதிரான கருத்துகளைப் பகிர்ந்து வந்தார். அதேசமயம், தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு ஆதரவாகவும் பேசி வந்தார். இதனால், அவர் திமுகவில் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாகப் பேசப்பட்டது. இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் திமுக அல்லது விசிகவில் இணையத் தயார் எனக் கூறியிருந்தார். இவ்வாறான நிலையில் அவர் இன்று(19-01-2024) யாரும் எதிர்பாராத விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்