முத்தமிழ் அறிஞரும், முன்னாள் முதல்- அமைச்சருமான மு.கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் இன்று(03-06-2024) தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அந்தவகையில் திரைப்பட நடிகரும், நாடக கலைஞரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.வி.சேகர் கலைஞருடன் தான் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அதில்,
முத்தமிழ் வித்தகருடன் நாடக திரை கலைஞனாக நான்!
அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரது அன்புக்கு பாத்திரமானவன் என்ற பெருமை எனக்கு உண்டு!
அந்த இனிய நினைவுகளுடன் கலைஞரது நூறாவது பிறந்தநாள் நிறைவில் நானும்…
என்று குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.