Rock Fort Times
Online News

திடீரென கொடியை அறிமுகப்படுத்திய நடிகர் தனுஷ்: அரசியலில் குதிக்க திட்டமா?…

நடிகராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்த விஜய், முதல் சட்டமன்ற தேர்தலிலேயே அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து முதலமைச்சர் ஆகி உள்ளார். அவரைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, அரசியலுக்கு வருவார் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், அவர் அதனை திட்டவட்டமாக மறுத்தார். இந்தநிலையில் இன்று (ஜூலை 6) நடிகர் தனுஷ் திடீரென தனது ரசிகர்களுக்காக கொடியை அறிமுகப்படுத்தினார். அது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பி இருக்கிறது. அந்த கொடியில் மேலே வெள்ளை நிறமும், கீழே சிவப்பு நிறமும், நடுவில் சிவப்பு நட்சத்திரமும் இடம் பெற்றிருக்கிறது. பொதுவாக ரசிகர் மன்ற கொடி எனில், அதில் அந்த நடிகரின் உருவப்படம்தான் இடம்பெற்றிருக்கும். ஆனால், தனுஷ் வெளியிட்டிருக்கும் இந்த கொடியில், அவரது புகைப்படத்துடன் சேர்த்து நட்சத்திரம் இடம்பெற்று இருக்கிறது. இதனால் நடிகர் தனுஷ் அரசியல் கட்சி தொடங்கப் போகிறாரா?, அதற்கான முன்னோட்டமாக கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தியிருக்கிறாரா? என்றெல்லாம் பேசப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தனுஷ் தரப்பில் இருந்து இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்