ஆந்திராவிற்கு முதலீட்டு ரகசியங்கள் கசிந்ததாகத் தகவல் பரவிய நிலையில், ஆந்திர தொழில்துறை அமைச்சர் நாரா லோகேஷ், முதலீட்டாளர்கள் தொடர்புகொண்டால், உடனடியாக அவர்களுக்கு பதிலளிக்க வேண்டும், காலம் தாழ்த்தக் கூடாது, வேகம்தான் முக்கியம் என பதிவிட்டிருந்தார். அவரது இந்த கிண்டலான கருத்துக்குத் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பதிலளித்துள்ளார் அவர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள போஸ்டில்,
“வேகமான பதில்கள் நல்லதுதான்; ஆனால் அதைவிட வேகமான செயல்பாடு இன்னும் சிறந்தது. வெற்றி முதலீடு மற்றும் செயல்பாட்டு மாநாடு 2026-இன் 2-வது பதிப்பிற்குத் தமிழ்நாடு தயாராகி வருகிறது.
எங்கள் இலக்கு தெளிவானது: முதலீட்டு உறுதிமொழிகள், செயல்பாட்டு மைல்கற்கள், களத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் விஜய் தலைமையின் கீழ், முதலீட்டு உறுதிமொழிகளை உறுதியான பலன்களாக மாற்றுவதிலும், களத்தில் முடிவுகளை வழங்குவதிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இன்னும் 4 நாட்களே உள்ளன
நவம்பர் 25, 2026.” என்று தெரிவித்துள்ளார். சென்னையில் முதல்வர் விஜய் தலைமையில் இரண்டாவது வெற்றி தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நவம்பர் 25ம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.