பெண்களை ஆபாசமாக பேசிய த.வெ.க.வினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது… பிரேமலதா பேச்சுக்கு அமைச்சர்கள் பதிலடி..!
பெண்கள் குறித்து தவறாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் விஜய் கூறிய கருத்தை வரவேற்பதாக தெரிவித்துள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அந்த கொள்கை அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பெண் தலைவர்களை சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசுவதில் தவெக உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அத்தகைய நபர்களை தவெக தலைமை உடனடியாக கண்டிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். “அதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், “சமூக வலைத்தளங்களில் திமுக தான் Fake ID-களை உருவாக்கி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. என் பெயரிலேயே நான்கு Fake ID-கள் உருவாக்கப்பட்டுள்ளன” என்றார். அப்படி தவறு செய்த தவெகவினரை கட்சியைவிட்டே நீக்கியிருக்கிறோம்” என்று அமைச்சர் என். ஆனந்த் கூறினார்.

Comments are closed.