திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி ( வயது 65). கூலித்தொழிலாளி. இவர், நேற்று ( 27.06.2023 ) இரவு கருமண்டபம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர் மீது ஏறி குதிக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் நடராஜன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில், கருப்புசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த கருப்பு சாமியின் உறவினர்கள் விபத்தை ஏற்படுத்திய சப்- இன்ஸ்பெக்டரை கைது செய்யக்கோரியும், சாலையை சரிசெய்யக்கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். மேலும், சப்- இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பேரில் சாலை மறியலை கைவிட்டனர். பின்னர் கருப்புசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.