Rock Fort Times
Online News

ஆடி மாத முதல் வெள்ளி: அம்மன் கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்…* விளக்கேற்றி பெண்கள் வழிபாடு..!

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். திருமணமாகாத பெண்கள் இந்த மாதத்தில் அம்மனுக்கு விரதம் இருந்து வேண்டிக் கொண்டால் திருமண பாக்கியம் கைகூடும், குழந்தை வரம் இல்லாத பெண்களுக்கு வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்தநிலையில் இன்று (ஜூலை 17) ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன.
கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் கோவிலில் உள்ள மண்டபத்தில் நெய்விளக்கு, சூடம் ஏற்றியும், பால்குடம் எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல திருச்சியில் உள்ள அம்மன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வழிபட்டனர். பெண்கள் விளக்கேற்றி மனமுருகி அம்மனிடம் வேண்டிக் கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்