Rock Fort Times
Online News

திருச்சியில் கான்கிரீட் கலவை எந்திரத்தில் சிக்கி வாலிபரின் கை துண்டானது !

சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36) இவருக்கு விஜயா என்ற மனைவியும், சரவணன், பிரசாத் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். மணிகண்டன் கான்கிரீட் கலவை எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம், தளுகையை சேர்ந்த டி.பாதர்பேட்டையில் உள்ள சுரேஷ் என்பவரது நெல்களத்தில் கான்கிரீட் போடும் பணியில் ஈடுபட்டு இருந்தார். பின்னர் மணிகண்டன் எந்திரத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அவரது இடது கை எந்திரத்தில் சிக்கியது. இதனால் வேதனையில் அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவரது இடது கை முழுவதும் நசுங்கி இருந்தது. இதனையடுத்து டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் இடது கை முழுவதும் துண்டிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்