தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் ஆண்டாள் பாசுரத்தை 12 ஆயிரம் முறை பாடி சிறப்பு பிரார்த்தனை… * ராமன் பட்டாச்சாரியார் தலைமையில் வருகிற 6-ம் தேதி நடக்கிறது..! (வீடியோ இணைப்பு)
‘நீரின்றி அமையாது உலகு’ என்பது ஆன்றோரின் வாக்கு. விவசாயத்திற்கும், பொதுமக்களுக்கும் உயிரினங்களுக்கும் நீர் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால், தமிழகத்தில் மழை இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல பொதுமக்கள் குடிநீர் தேவைகளுக்கும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையை போக்கவும், நல்ல மழை பெய்ய வேண்டியும், உலக மக்கள் நல்ல விதமாக வாழ்வதற்கும், பகவானுடைய பூசனைகள் நல்லபடியாக நடைபெறுவதற்கும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வருகிற 6-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் திருப்பாவையில் உள்ள ஆண்டாள் பாசுரமான “ஆழி மழை கண்ணா”… பாசுரத்தை எம்பெருமான் முன்பு 12 ஆயிரம் முறை பாடும் நிகழ்வு ராமன் பட்டாச்சாரியார் தலைமையில் நடைபெறுகிறது. இதில், அனைத்து தரப்பினரும் பங்கேற்று தமிழகத்தில் நல்ல மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், உயிரினங்கள் வாழ வேண்டியும் பிரார்த்தனை செய்யுமாறும், எம்பெருமான் மற்றும் ஆண்டாள் அருள் பெற்று செல்லுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.