திருச்சி மணிகண்டம் தீரன் மாநகரை சேர்ந்தவர் கரந்தமலைமாறன். இவரது மகன் அகிலன் (வயது 20) . இவர் திருச்சியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அகிலன் மற்றும் அவரது நண்பர் மதன் பிரசாத் (19) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் திருச்சி மன்னார்புரத்தில் இருந்து பி.என்.டி.காலனி அருகே வந்து கொண்டு இருந்தனர். அப்போது கீழே விழுந்த ஹெல்மெட்டை எடுக்க அகிலன் நடுரோட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளாா். அப்போது அந்தப் பகுதியில் போக்குவரத்து பணியில் இருந்த திருச்சி நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஸ்ரீதர் (45) என்பவர் சாலையில் விழுந்த ஹெல்மெட்டை எடுத்து கொடுத்துள்ளார். அப்போது மன்னார்புரத்தில் இருந்து வந்த ஒரு கார், ஸ்ரீதர் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் நின்று கொண்டிருந்த அகிலன், மதன் பிரசாத் ஆகியோரும் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஸ்ரீதர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கண்டோன்மெண்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிாிழந்த காவலா் ஸ்ரீதருக்கு மனைவி சுமித்ரா , மகன் இந்திாியன் மற்றும் இனியா என்ற மகளும் உள்ளனா். இறந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஸ்ரீதாின் உடல் போலீஸ் மாியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.