திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியை சேர்ந்த கந்தசாமியின் மகன் முருகேசன் (49) என்பவர் காரில் புள்ளம்பாடியில் இருந்து பைபாஸ் சாலையில் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். அதேபோல, சமயபுரம் பகுதியில் இருந்து திருச்சி நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. கூத்தூர் மேம்பாலம் அருகே சென்ற போது காரின் பக்கவாட்டு பகுதியில் லாரி மோதியது. இதனால் நிலை தடுமாறிய கார், சாலையின் தடுப்பு கட்டையின் மேல் ஏறி நின்றது. இதில், காரை ஓட்டி வந்த முருகேசன் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார். கார் சேதமடைந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கொள்ளிடம் போலீசார், லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவருக்கு ஒரு கால் இல்லாமல் செயற்கை கால் பொருத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், ஒரு கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி எப்படி லாரியை ஒட்டி வந்தார்?, லாரியை ஓட்டிச் செல்ல அதன் உரிமையாளர் எப்படி அனுமதித்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.