திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருவானைக்காவல் இரணியம்மன் கோவில் அருகே சென்னையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி செங்கற்கள் ஏற்றிய லாரி ஒன்று இன்று ( 14.06.2023 ) அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரி திடீரென தறிக்கெட்டு ஓடி அந்த வழியாகச் சென்ற அரசு பஸ் மீது மோதியது. இந்த விபத்தில், புதுக்கோட்டை மாவட்டம் காளப்பனூரை சேர்ந்த பஸ் டிரைவர் பன்னீர்செல்வம், கண்டக்டர் கோபிநாதன் உள்ளிட்ட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பஸ் டிரைவர் பன்னீர்செல்வம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.