ரேஷன் கடைகளில் இன்னும் கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்களுக்கு பொன்னான வாய்ப்பு…* இன்றும், நாளையும் சிறப்பு முகாம்!
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்றும் நாளையும், கைவிரல் ரேகை பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்:- தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வித இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, 95.86% eKYC பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு இன்றும்( 08.08.2026மற்றும் நாளையும் (09.08.2026) ஆகிய
2 நாட்களில் தமிழகத்திலுள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. ஆகவே, நியாயவிலைக்கடைகளில் கைரேகை பதிவு செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் கைரேகை விரல் பதிவு
செய்து கொள்ளுமாறு அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.