திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் தாலுகா குண்டுமணிப்பட்டியைச் சேர்ந்த வேதாச்சலம் (35) . இவர் தச்சு வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கல்பனா (32) இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இந்துஜா (8 ),சஹானா வயது (6) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் குண்டுமணிப்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் இந்துஜா 3ம் வகுப்பும், சஹானா 1ம் வகுப்பும் படித்து வருகின்றார்கள். சம்பவத்தன்று வீட்டிற்கு வெளியே விளையாட சென்ற சஹானா வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் தேடினர். பின்பு குண்டுமணிப்பட்டியில் புதிய அங்கன்வாடிக் கட்டிடம் கட்ட கடந்த வெள்ளிக்கிழமை பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அந்த பள்ளத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை நீர் தேங்கி பள்ளம் தெரியாமல் இருந்துள்ளது. இந்த பள்ளத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சஹானா எதிர்பாராத விதமாக விழுந்துள்ளார். இதில் சஹானா பரிதாபமாக இறந்தாா். இது குறித்து தகவல் அறிந்த காட்டுப்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சஹானாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.