திருவெறும்பூர் அருகே நவல்பட்டில் உள்ள தீயணைப்பு துறை சார்பில் நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள காவலர் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் பெண் காவலர்களுக்கு தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகையை நவல்பட்டு தீயணைப்பு துறையினர் செய்து காண்பித்தனர். இதில் காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, துணை முதல்வர் மணவாளன் உட்பட பயிற்சி கல்லூரி காவலர்கள் மற்றும் பயிற்சி பெற்று வரும் பெண் காவலர்களும் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். மேலும், திருவெறும்பூர் வட்டார மருத்துவமனை ஊழியர்களுக்கும், தீ தடுப்பு ஒத்திகை மற்றும் பாதுகாப்பு ஒத்திகைகளை நவல்பட்டு தீயணைப்பு துறையினர் செய்து காண்பித்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.