Rock Fort Times
Online News

மகளிருக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் 20-ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம்…

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழக அரசு வெளியிட்டது. இதில் விண்ணப்பதாரரின் பெயர், திருமண நிலை, தொலைபேசி எண், மின் இணைப்பு எண், ஆதார் எண், குடும்ப அட்டை எண், வாடகை வீடா அல்லது சொந்த வீடா என்பன உள்ளிட்ட 10 கேள்விகள் இடம் பெற்றுள்ளன. வரும் 20-ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பயனாளிகளுக்கு வீடுதோறும் ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கனையும் விண்ணப்பங்களையும் கொடுப்பார்கள். அந்த விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து டோக்கனில் உள்ள தேதி, நேரத்தில் ரேஷன் கடையில் ஒப்படைக்க வேண்டும். அவற்றை மாவட்ட கலெக்டர் குழு ஆய்வு செய்து பயனாளிகளை கண்டறியும். இந்த திட்டத்திற்கு கைவிரல் ரேகை அவசியம் என்று சொல்லப்பட்டுள்ளது

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்