Rock Fort Times
Online News

காமராஜா் பிறந்தநாள் – திருச்சியில் பாலாபிஷேகம்..

காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு காமராஜர் பேரவை தலைவர் கள்ளிக்குடி குமார் தலைமையில் திருச்சி காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞா் சரவணன் முன்னிலையில் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வழக்கறிஞா் சரவணன், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவர் மலைக்கோட்டை முரளி, சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் ரயில் சரவணன், மலைக்கோட்டை கோட்டம் வெங்கடேஷ் காந்தி, கிழக்கு சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது ரபிக், கலை பிரிவு சண்முகம் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்