Rock Fort Times
Online News

டெல்டா மண்டல தி.மு.க.வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்…!

பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு...

முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 22.03.2023 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தி.மு.க.வில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்தல், முழுமையாக பூத் கமிட்டி அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்தநிலையில் டெல்டா மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் “வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம்” வருகிற 26-ந் தேதி (புதன்கிழமை) திருச்சி ராம்ஜி நகர், கருமண்டபத்தில் நடக்கிறது. இதில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

டெல்டா மண்டலத்துக்கு உட்பட்ட அரியலூர், பெரம்பலூர், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் மத்திய, தஞ்சாவூர் தெற்கு, திருச்சி தெற்கு, திருச்சி மத்திய, திருச்சி வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, புதுக்கோட்டை வடக்கு ஆகிய 15 மாவட்டங்களின் செயலாளர்கள், வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்திற்காக 11 ஏக்கரில் சுமார் 13,000 பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்படுகிறது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. கூட்டத்திற்கான பந்தல் ஏற்பாடுகளை தி.மு.க.முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான கே.என்.நேரு இன்று ( 14.07.2023 ) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், மணிகண்டம் ஒன்றிய செயலாளர் மாத்தூர் கருப்பையா, மணிகண்டம் ஒன்றிய குழு தலைவர் கமலம் கருப்பையா, முன்னாள் கவுன்சிலர் கிராப்பட்டி செல்வம், அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் துரைராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்